Divorce

DIFFERENCE OF OPINION   DIVORCE  (விவாகரத்து)  சட்டம் சொல்வது என்ன?


ஆண்களோ அல்லது பெண்களோ, தம் தம் திருமணம் ஆன வாழ்க்கை கசக்கும்பொழுது, அதிலிருந்து விடுபட்டு வெளிவர நினைப்பது தவறானதல்ல. ஆனால், எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்துப் பெறுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்பதுகுறித்த விரிவான புரிதல் குறைவாக இருக்கிறது.

 

 1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.   

 2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.  

 3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது,  கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக்கொண்டு விவாகரத்து கோரலாம். (கிறிஸ்தவர்கள், இந்தக் காரணத்துக்காக மட்டும் விவாகரத்து பெற முடியாது.)

 4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம். 

 5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.  

 6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா  நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)  

 7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.

 8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.  

 9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.   

 10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல்  இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.

 11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம். 

 12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.

 13. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.''

 14. ஏற்கனவே பதிவு ஆன திருமணத்தினை விவாகரத்து பெற்ற பின் அந்த பதிவினை ரத்து செய்யக் கோர அந்த விவாகரத்து ஆன முன்னால் கணவருக்கோ அல்லது முன்னால் மனைவிக்கோ உரிமை உண்டு. விவாகரத்தின் செல்லுபடி தன்மை  தொடர்பாக ஏதேனும் தகராறு இருந்தால், தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல்  பதிவாளர் அத்தகைய விவாகரத்தை பதிவேட்டில் இருந்து ரத்து  செய்ய முடியாது .  

WHAT IS DIVORCE THROUGH MUTUAL CONSENT ?

The consent theory is based upon the logic that the marriage is entered into by the parties out of their free will, and hence, they must also be free to put an end to the marriage, if both of them agree. Sometimes the Husband and Wife may fail to adjust to each others likings, wishes and preferences, egos etc thereby not reconciling with each other. In such an event a petition for dissolution of marriage by a decree of divorce may be presented to the District Court by both the parties to a marriage at one go. Both the Husband and wife must satisfy the Court on certain grounds. Section 13-B of the Hindu Marriage Act, 1955 requires the petition for mutual divorce to be filed on the ground that both parties to the marriage have been living separately for a period of one year or upwards, that they have not been able to live together, and that they have mutually agreed that the marriage should be dissolved. These are the only requirements of a petition filed under this provision claiming divorce my mutual consent. Sub-section 2 of Section 13-B provides for the requirements to be fulfilled at the trial.  There will be a joint motion by both the parties made not earlier than 6 months after the date of presentation of the petition and not later than 18 months after that date. The motion being made by the parties in this manner, the Court is required to be satisfied, after hearing the parties and making such enquiry as it thinks fit, that the marriage has been solemnized and that the averments made in the petition are true. On satisfaction of the Court about these matters, the Court is required to pass a decree of divorce declaring the marriage to be dissolved with effect from the date of the decree. Some of the legal ramifications in respect of Section 13-B(2) have been well examined in Roopa Reddy v Prabhakar Reddy case II (1993) DMC 274. The Division Bench of the Karnataka High Court categorically said that the intention of the legislature in introducing Section 13-B is to liberalise and unlock the marriage enabling the unwilling parties to seek divorce simulateneously and thus bring an end to their untold misery thereby helping the two discordant spouses to get quick separation and lead their remaining life without any agony. When a couple gets divorced by mutual consent, the decision on whether any alimony/maintenance is to be paid by either party is a matter of agreement between them. In such cases, alimony/maintenance could be paid by either the husband to the wife or by the wife to the husband subject to the mutual understanding between the couple. The court passes the decree of divorce on terms agreed between the couple. The decree binds the couple and is capable of being enforced by the court.

The object behind is to prevent vagrancy of the aggrieved spouse resulting from stained relationship.